உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு மற்றும் சீனி இறக்குமதியில் சிக்கல்கள்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
15

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு மற்றும் சீனி இறக்குமதியில் சிக்கல்கள்

உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு மற்றும் சீனி இறக்குமதியில் சிக்கல்கள்

எதிர்வரும் நாட்களில் சந்தையில் உருளைக்கிழங்கு, வெங்காயம், பருப்பு, சீனி மற்றும் அரிசி போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

மேலும், காய்ந்த மிளகாய், கொண்டைக்கடலை, நெத்தலி மீன்களுக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என சங்கம் தெரிவித்துள்ளது.

 

அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் ஏனைய பொருட்களின் இறக்குமதியில் பயன்படுத்தப்படும் திறந்த கணக்கீட்டு முறையை மே 06 ஆம் திகதி முதல் இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

 

திறந்த கணக்கீட்டு முறை இரத்து செய்யப்பட்டதன் மூலம் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு டொலர்களை பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

இந்தியாவினால் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதன் காரணமாக சந்தையில் சீனி, கோதுமை மா மற்றும் இதர பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

 

சந்தையில் சீனி மற்றும் பருப்பு விலைகள் சமீபகாலமாக உயர்ந்து வருவதற்கு இந்தியாவின் ஏற்றுமதியை நிறுத்தியது ஓர் காரணமாகும்.

 

அரிசி பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை குறைந்த எண்ணிக்கையில் சந்தைக்கு வெளியிட கடை உரிமையாளர்கள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளனர்.

 

இதேவேளை, கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை சதோச வழங்குவதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், போதியளவு பொருட்கள் கிடைக்கவில்லை என நுகர்வோர் விசனம் தெரிவிக்கின்றனர்.

views

491 Views

Comments

arrow-up