எரிபொருள் கொள்முதல் அட்டை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

எரிபொருள் கொள்முதல் அட்டை

எரிபொருள் கொள்முதல் அட்டை

ரேஷன் முறையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக புதிய அட்டையொன்றை அறிமுகப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

அதற்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் ஆகும் என இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார்.

 

சட்டவிரோதமாக வாகனங்களுக்கு எரிபொருளை பயன்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக பொலிஸாரால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அப்ளிகேஷன் இன்று முதல் மீண்டும் செயற்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

உதாரணமாக, ஒரு வாரத்திற்கு 100 லீற்றர் ரேஷன் அட்டையை வைத்திருக்கும் ஒருவர், பதிவு செய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 60 லீற்றரைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும், எஞ்சிய 40 லீற்றரை நாட்டிலுள்ள எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, முறையான முகாமைத்துவத்தின் ஊடாக விநியோகம் மேற்கொள்ளப்பட்ட போதிலும் தற்போதுள்ள பெற்றோல் இருப்பு அடுத்த மாதம் 21ஆம் திகதி வரை போதுமானதாக இருக்காது என வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

views

60 Views

Comments

arrow-up