பேரிச்சம்பழம் மீதான வரி குறைப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
29

பேரிச்சம்பழம் மீதான வரி குறைப்பு

பேரிச்சம்பழம் மீதான வரி குறைப்பு

பேரிச்சம்பழத்திற்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக வரியைக் குறைத்து விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

 

அதற்கமைய தற்போது காணப்படும் 200 ரூபா விசேட வர்த்தகப் பொருட்கள் வரி ஒரு ரூபா வரை குறைக்கப்படவுள்ளது.

 

இன்று(28) முதல் எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி வரை அமுலாகும் வகையில் வரிக்குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

 

இதனிடையே எதிர்வரும் ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லிம்களின் நுகர்விற்காக சவுதி அரேபியா 50 மெட்ரிக் தொன் பேரிச்சம்பழங்களை இம்முறையும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

 

குறித்த பேரிச்சம்பழங்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்தார்.

 

அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.

views

56 Views

Comments

arrow-up