இந்த வருடம் கொரோனாவால் ரூ .1600 பில்லியனை அரசாங்கம் இழந்துள்ளது - நிதி அமைச்சர்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
SEP
07

இந்த வருடம் கொரோனாவால் ரூ .1600 பில்லியனை அரசாங்கம் இழந்துள்ளது - நிதி அமைச்சர்

இந்த வருடம் கொரோனாவால் ரூ .1600 பில்லியனை அரசாங்கம் இழந்துள்ளது - நிதி அமைச்சர்

இந்த வருடம் உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா தொற்றுநோயால் அரசாங்கத்திற்கு ரூ .1600 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

 

பாராளுமன்றத்தில் இன்று இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டு சட்டம் குறித்து கருத்து தெரிவித்த அவர், கோவிட் 19 தொற்றுநோயால் மறைமுக வரி வருவாய் 70 சதவீதம் குறைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

 

நாடு முடக்கப்பட்டமையால் நாட்டின் முக்கிய வருமான ஆதாரங்களான உள்நாட்டு வருவாய் துறை, இலங்கை சுங்கம் மற்றும் கலால் துறை ஆகியவற்றின் வருவாய் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

 

மேலும் பேசிய நிதியமைச்சர் பசில் ராஜபக்ச, எவ்வாறாயினும், அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண விவாதித்து வருகிறது என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

source:hirunews

views

129 Views

Comments

arrow-up