மருத்துவ ஆலோசனைக்காக வந்த யுவதியை கொலை செய்த சந்தேகநபருக்கு மரண தண்டனை!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

மருத்துவ ஆலோசனைக்காக வந்த யுவதியை கொலை செய்த சந்தேகநபருக்கு மரண தண்டனை!

மருத்துவ ஆலோசனைக்காக வந்த யுவதியை  கொலை செய்த சந்தேகநபருக்கு மரண தண்டனை!

மருத்துவ ஆலோசனை பெற்றுக்கொள்ள வந்த திருமணமாகாத யுவதியை தனது அறைக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து கொன்று, ஜன்னலுக்கு வெளியே தூக்கி எறிந்த இரண்டு குற்றச்சாட்டுகளில் நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட வைத்தியர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

 

இரண்டு குற்றச்சாட்டுக்களிலும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்த நீர்கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு 15 வருட கடூழியச் சிறைத்தண்டனையும் அத்துடன் 10,000 ரூபா அபராதமும் விதித்துள்ளது.

 

நீர்கொழும்பு ஆதார வைத்தியசாலையின் சத்திரசிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய குற்றஞ்சாட்டப்பட்ட வைத்தியருக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த பின்னர், 2014 ஆம் ஆண்டு நவம்பர் 12 ஆம் திகதி நீர்கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இந்த தண்டனை வழங்கப்பட்டது.

 

தண்டனையை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்டவர்களால் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று நீதிபதி குமாரரத்கம முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

 

இறப்பிற்கு சற்று முன்னர் பாதிக்கப்பட்ட பெண் பிரதிவாதியின் அறையில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், மரணத்தின் போது பாதிக்கப்பட்ட யுவதி பலாத்காரம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை முழுமையாக ஆய்வு செய்த பிறகே தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

views

94 Views

Comments

arrow-up