எத்தனோல் இறக்குமதி தொடர்பில் கோபா அதிருப்தி!
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
16

எத்தனோல் இறக்குமதி தொடர்பில் கோபா அதிருப்தி!

எத்தனோல் இறக்குமதி தொடர்பில் கோபா அதிருப்தி!

நாட்டில் பயன்படுத்துவதற்காக இறக்குமதி செய்யப்படும் எத்தனோலின் அளவு மற்றும் இறக்குமதி செய்யும் நிறுவனங்களின் முறையான கட்டுப்பாடு இல்லாதது குறித்து பொதுக் கணக்குக் குழு விசேட கவனம் செலுத்தியுள்ளது.

 

இதன்படி, இலங்கைக்குள் பல்வேறு நிறுவனங்களுக்கு எத்தனோல் இறக்குமதி செய்வதற்கான உரிமம் வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து இரண்டு வாரங்களுக்குள் குழுவிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 

மதுபானம் மற்றும் மருந்துப் பொருட்கள் தவிர மற்ற பொருட்களுக்கு இறக்குமதி செய்யப்படும் எத்தனோலின் அளவு மற்றும் அந்த பொருட்களுக்கு மட்டும் எத்தனோல் சரியாக பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

இதேவேளை, இலங்கைக்கான வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்த குழு, மோட்டார் போக்குவரத்து திணைக்களத்துடன் இணைந்து உரிய நடைமுறையை வகுக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முன்னர் பணிப்புரை விடுத்துள்ளது.

 

எவ்வாறாயினும், பொதுக் கணக்குக் குழு இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்திற்கு மேலும் நான்கு மாத காலத்திற்குள் பொருத்தமான வழிமுறையைத் தயாரித்து குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

மேலும், ஒரு கிலோ சீனி மீதான கலால் வரியை 50 ரூபாவிலிருந்து 25 சதமாக குறைத்தது குறித்த ஆய்வின் விசேட தணிக்கை அறிக்கை.

 

சீனி இறக்குமதிக்கு உரிமம் வழங்கும் முறை அறிமுகம் மற்றும் சீனி இறக்குமதியை கட்டுப்படுத்த தேவையான அளவுகோல்களை அறிமுகப்படுத்தாதது மற்றும் உரிமம் வழங்குவதில் தாமதம் ஆகியவையும் 21ம் திகதி குழுவில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்.

views

445 Views

Comments

arrow-up