நான்கு புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்ட புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
பிரதி சபாநாயகர் டொக்டர் மொஹமட் ரிஸ்வி முன்னிலையில் இவர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிய ஜனநாயக முன்னணின் பாராளுமன்ற உறுப்பினராக ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக மனோ கணேசன், சட்டத்தரணி சுஜீவ சேனசிங்க, முத்து மொஹம்மட் ஆகியோர் இவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர்.
101 Views
Comments