மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் - பிரதமர் ஹரிணி

மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய உறுதியளித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட அவர் மக்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த போதே இதனை தெரிவித்தார்.
06 மாத காலப்பகுதியில் 03 தேர்தல்கள் நடத்தப்பட்டுள்ள நிலையில் நான்காவது தேர்தலாக மாகாண சபை தேர்தலை நடத்த தமது அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் இதன்போது கூறினார்.
அனைவரையும் பிரதிநிதித்துவப்படும் அரசாங்கமே தற்போது உள்ளதாகவும் இம்முறை பாராளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக இருக்கின்றமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மாற்றத்திற்கு மக்களே காரண கர்த்தாக்கள் எனவும் மக்கள் தமது அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கை எதிர்பார்ப்புகளை பேணி பாதுகாத்து நேர்மையாக பொறுப்புடன் பணியாற்றுவதே தமது கடமை எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
24 Views
Comments