கோர விபத்தில் யாழ். கொக்குவில் இளைஞன் உயிரிழப்பு
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
MAR
15

கோர விபத்தில் யாழ். கொக்குவில் இளைஞன் உயிரிழப்பு

கோர விபத்தில் யாழ். கொக்குவில் இளைஞன் உயிரிழப்பு

வீதியினை கடக்க முற்பட்ட பாதசாரி ஒருவர் மீது வான் ஒன்று மோதிய வீதி விபத்தில் யாழ்ப்பாணத்தைச் (Jaffna) சேர்ந்த 28 வயது இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

குறித்த விபத்து மட்டக்களப்பு (Batticaloa) - திருகோணமலை வீதியிலுள்ள தனியார் வங்கிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (14) அதிகாலை 6.30 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

யாழ். கொக்குவில் காங்கேசன்துறை (KKS) வீதியைச் சேர்ந்த 28 வயதுடைய மதுசகின் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு பேருந்தில் வந்து இறங்கிய நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

மட்டக்களப்பில் இருந்து திருகோணமலை வீதியில் கொழும்பை நோக்கி சம்பவ தினமான இன்று அதிகாலை 6.30 மணிக்கு பிரயாணித்த வான் தனியார் வங்கியான ஹற்றன் நஷனல் வங்கிக்கு முன்னால் வீதியை கடக்க முற்பட்ட குறித்த நபருடன் மோதி விபத்துக்குள்ளாது.

 

இதில் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

 

மேலும், வான் சாரதியை கைது செய்ததுடன் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

views

48 Views

Comments

arrow-up