பொதுத் தேர்தல் முடிந்ததும் விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு

பொதுத் தேர்தல் முடிவடைந்ததும் வெகு விரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தல் நிறைவடைந்ததும் அதற்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கையூடாக அறிவித்துள்ளது.
நாட்டு மக்களின் ஜனநாயக உரிமையைப் பாதுகாப்பதற்காக தமது அலுவலகம் கடமைப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 22ஆம் திகதி உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கமைய, சட்டத்தின் பிரகாரம் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் கூறியுள்ளது.
136 Views
Comments