உக்ரைன் வணிக கட்டிடம் மீது ஏவுகணைகளை வீசியது ரஷ்யா அல்ல
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JUN
29

உக்ரைன் வணிக கட்டிடம் மீது ஏவுகணைகளை வீசியது ரஷ்யா அல்ல

உக்ரைன் வணிக கட்டிடம் மீது ஏவுகணைகளை வீசியது ரஷ்யா அல்ல

உக்ரைன் நாட்டின் கிரெம்ளின் நகரில் பரபரப்பான வணிக வளாகம் மீது கடந்த 27ம் திகதி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தவில்லை என மாஸ்கோ தெரிவித்துள்ளது.

 

எனினும் இந்த ஏவுகணை தாக்குதலின் சிசிடிவி காட்சிகளை உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கி சர்வதேச ஊடகங்களுக்கு வெளியிட்டார்.

 

ஏவுகணை தாக்குதலின் போது 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் வணிக வளாகத்திற்குள் இருந்தனர், இதில் 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.

 

இதற்கிடையில், தலிபான்களுடன் உறவை மேம்படுத்த ரஷ்யா உத்தேசித்துள்ளதாக தஜிகிஸ்தானில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்.

 

உக்ரைன் மீது போர் பிரகடனம் செய்த பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும்.

 

இருப்பினும், ரஷ்யா இன்னும் தலிபான்களை பயங்கரவாத அமைப்பு என்று பெயரிடுகிறது.

views

103 Views

Comments

arrow-up