மழையுடனான வானிலையால் ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிப்பு - ரயில்வே திணைக்களம்

மழையுடனான வானிலை காரணமாக ரயில் போக்குவரத்து தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
மழை வௌ்ளம் காரணமாக மட்டக்களப்பு மார்க்கத்தினூடான ரயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, இன்று(27) முற்பகல் கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கவிருந்த உதயதேவி ரயில் சேவை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, மண்மேடு சரிந்து வீழ்ந்ததால் மலையக மார்க்கத்தினூடான ரயில் போக்குவரத்து நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மண்மேடு சரிந்து வீழ்ந்துள்ளதால் பல பகுதிகளிலும் உள்ள குறுக்கு வீதிகளில் இடையூறு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
82 Views
Comments