சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
18

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது

சபுகஸ்கந்த மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது

சபுகஸ்கந்த அனல்மின் நிலையத்தில் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

 

எவ்வாறாயினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 900 மெட்ரிக் தொன் எரிபொருளை இலங்கை மின்சார சபைக்கு வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

களனிதிஸ்ஸ அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள அனைத்து வெப்ப உற்பத்தி இயந்திரங்களையும் இயக்குவதற்கு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று (18) மாலை 5.00 மணி முதல் மூடப்படும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

எரிசக்தி அமைச்சு மற்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் பல தடவைகள் தேவையான எரிபொருள் இருப்புக்களை பெற்றுக்கொள்வதற்காக கலந்துரையாடப்பட்ட போதிலும், அந்த கலந்துரையாடல்களுக்கு இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.

 

அதன்படி இன்று (18) மாலை 5.00 மணி முதல் 300 மெகா வொட்ஸ் மின்சாரம் தேசிய மின் உற்பத்திக்கு இழக்கப்பட்டுள்ளது.

 

இதன் காரணமாக இன்று முதல் ஒன்றரை மணிநேரம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் செயலாளர் தம்மிக்க விமலரத்ன தெரிவித்துள்ளார்.

 

இதேவேளை, இந்நிலைமை காணப்பட்ட போதிலும், சுகயீன விடுமுறையை பெற்றுக்கொண்டு கடமைக்கு சமூகமளிக்காமல், இன்று தொழிற்சங்க நடவடிக்கையொன்றை, இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் மேற்கொண்டுள்ளது.

views

104 Views

Comments

arrow-up