புலமைப்பரிசிலுக்காக இன்னும் ஆன்லைனில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
19

புலமைப்பரிசிலுக்காக இன்னும் ஆன்லைனில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை

புலமைப்பரிசிலுக்காக இன்னும் ஆன்லைனில் கற்பிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை

பிரத்தியேக வகுப்புகள் தடைசெய்யப்பட்டுள்ள காலப்பகுதியில் இணையத்தில் விரிவுரைகளை வழங்கும் ஆசிரியர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

பிரத்தியேக வகுப்புகள் தடை செய்யப்பட்ட காலகட்டத்தில் சில ஆசிரியர்கள் ஆன்லைன் பயிற்சி மற்றும் கருத்தரங்குகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் எம். டி தர்மசேன கூறியுள்ளார்.

 

22ஆம் திகதி நடைபெறவுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான கல்வி வகுப்புகள், கருத்தரங்குகள் உள்ளிட்ட அனைத்து கற்பித்தல் நடவடிக்கைகளுக்கும் நேற்று (18) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை 2,943 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், பரீட்சைக்குத் தோற்றவுள்ள பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 3,40,508 ஆகும்.

 

இதேவேளை, 2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 7ஆம் திகதி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் 2,438 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.

 

தேர்வெழுத திட்டமிடப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 45,242 ஆகும்.

 

இவ்வருட க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்கான பரீட்சை நிலையமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வைத்தியசாலையைப் பயன்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

views

200 Views

Comments

arrow-up