வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி - அஜித் நிவார்ட் கப்ரால்
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
JAN
12

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி - அஜித் நிவார்ட் கப்ரால்

வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி - அஜித் நிவார்ட் கப்ரால்

அந்நிய செலாவணி இருப்பு வழமைக்கு திரும்பியதன் பின்னர் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு மீண்டும் அனுமதி வழங்க வாய்ப்பு இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

 

வாகன இறக்குமதியை இடைநிறுத்துவது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.

 

வாகனங்கள் மற்றும் டைல்கள் தவிர அத்தியாவசியமற்ற அனைத்து பொருட்களும் தற்போது இறக்குமதி செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதன் மூலம் பெருமளவிலான அந்நிய செலாவணி நாட்டை விட்டு வெளியேறுவதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எவ்வாறாயினும், நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைத் திரும்பக் கொண்டு வரக்கூடிய சுற்றுலா போன்ற பிரச்சினைகள் மீண்டும் எழுந்துள்ள நிலையில், ஸ்திரத்தன்மையின் மூலம் எதிர்வரும் மாதங்களில் வாகனங்களை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்க முடியும் என்று நம்புவதாக அஜித் நிவார்ட் கப்ரால் கூறியுள்ளார்.

views

227 Views

Comments

arrow-up