உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 6வது இடத்தில்..
வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு
Latest_News
calendar
NOV
28

உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 6வது இடத்தில்..

உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 6வது இடத்தில்..

நவம்பர் மாதம் உலக உணவு பாதுகாப்பு தொடர்பாக உலக வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் உலகில் உணவுப் பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளில் இலங்கை 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

 

குறித்த அறிக்கையின்படி இலங்கையில் உணவுப் பணவீக்கம் 86 சதவீதமாக உள்ளது. உலகின் மிக மோசமான உணவுப் பணவீக்கம் உள்ள நாடு ஜிம்பாப்வே, பணவீக்க விகிதம் 321 சதவீதம். உணவுப் பணவீக்கம் லெபனான் மற்றும் வெனிசுலாவில் முறையே 208 சதவீதம் மற்றும் 158 சதவீதமாக 100 சதவீதத்தைத் தாண்டியது.

 

இந்த மூன்று நாடுகளைத் தவிர, இலங்கையை விட அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளாக துருக்கி மற்றும் அர்ஜென்டினா ஆகியவை தரவரிசையில் உள்ளன.

 

குறித்த இரண்டு நாடுகளிலும் உணவுப் பணவீக்கம் 99.87 சதவீதமாகக் காட்டப்பட்டுள்ளது.

views

27 Views

Comments

arrow-up